2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டர்ம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோசடி குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள நரேந்திர மோடி, ட்ரம்ப்பை நண்பர் என குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் வாழ்த்துச் செய்தியானது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமெரிக்க-இந்தியா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.