வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிடடது.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய போதுமான சாட்சியங்கள் இல்லாததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் 4000 தாய்மார்களுக்கு கருவுறாமை சத்திர சிகிச்சைகளை செய்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று மற்றும் பிரசவ வைத்தியர் ஷிஹாப்தீன் மொஹமட் சாபி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.