அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளார்.
இதற்கமைய அவர் அந்நாட்டின் 270 தேர்தல் கல்லூரிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் 214 தேர்தல் கல்லூரிகளிலேயே வெற்றிப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் 60வது ஜனாதிபதி தேர்தலின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. உலக அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி, சர்வதேச அரசியல் போக்குகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.