அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கட் தொடருக்கான வீரர்களின் ஏலம் இம்மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் இடம்பெறுமென இந்திய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஏலம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் இந்தியாவிற்கு வெளியே இடம்பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் ஏலத்திற்கென 1574 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 1165 பேர் இந்திய வீரர்கள். 409 பேர் வெளிநாட்டு வீரர்கள். தென்னாபிரிக்கா வீரர்களின் பெயர்கள் வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் அதிகமுள்ளன. 10 அணிகளுக்கென மொத்தமாக 204 வீரர்கள் ஏலமெடுக்கப்படுவார்கள். இதில் 70 வெளிநாட்டு வீரர்கள் அணிகளுக்கென தெரிவு செய்யப்படுவார்கள்.