அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் நிவ்யோர்க்கில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளதுடன் வடக்கு கெரோலினாவை டொனால்ட் ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார்.
இரு வேட்பாளர்களுக்கு மத்தியிலும் கடும் போட்டி நிலவுவதாக அமெரிக்க தேர்தல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அமெரிக்காவிலுள்ள தேர்தல் கல்லூரிகளில் 270 தேர்தல் கல்லூரிகளின் வாக்குகள் தேவைப்படுகின்றன.
இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்பiடையில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் 182 தேர்தல் கல்லூரிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 230 தேர்தல் கல்லூரிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
எனினும் அதிக மாநிலங்களை வெற்றிகொள்ளும் வேட்பாளர் யார் என்பதை இன்னும் கணிக்க முடியாதுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.