சமூக ஊடகத்தின் ஊடாக தொடர்புகொண்டு நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்று அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்து பணத்தை பெற்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆணொருவருடன் சமூக ஊடகத்தில் தொடர்புகொண்டு அவரிடம் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்று அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி நபர் ஒருவரிடம் 7 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதற்கமைய சம்பவம் தொடர்பில் தெஹிவளை பகுதியில் வைத்து 20 வயதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் கணனி குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைளை முன்னெடுத்துள்ளது.