வெல்லவாய மொனராகலை பிரதான வீதியின் ஆனபல்லம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்க முயற்சித்த போது லொறியொன்று அவர் மீது மோதியுள்ளது. ஆனபல்லம பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.