இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கென எந்தவொரு நபருக்கும் பணம் வழங்க வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் தரப்பினர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை இஸ்ரேலின் பராமரிப்பு சேவை தொழிலுக்கென 139வது குழுவிற்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இவ்வருடத்தில் குறித்த வேலைவாய்ப்புக்கென இஸ்ரேலுக்கு இதுவரை 929 பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.