தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீளப் பெறப்பட்டது.
தமது கட்சிக்காரருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கிள்ளதால் இந்த மனுவை தொடர வேண்டிய அவசியம் இல்லையென அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
இதற்கமைய மனுவை மீளப் பெற அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது.
ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் ஒருங்கிணைப்புக்கு உட்படுத்தப்பட்ட அதிசொகு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.