பிரதான குடிநீர் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கேகாலை நகருக்கு 48 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக என தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கேகாலை நகருக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் மீது பாரிய கல் ஒன்று விழுந்து சேதம் ஏற்பட்டதன் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழாயின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று (05) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 6.00 மணி முதல் புதன்கிழமை காலை 6.00 மணி வரை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகரசபை பகுதிகள், கட்டான மற்றும் மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒரு பகுதிக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.