இன்று (04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.55 ரூபாவாகவும், 297.60 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (01) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறயே 288.59 ரூபாவாகவும், 297.64 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.