முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வழக்கொன்று ஜனவரி மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரஜையாக இல்லாத நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கு பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் அன்றைய தினம் பிரதிவாதி மன்றில் ஆஜராகுவதற்கான அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.