நவம்பர் மாதத்திற்கென லிட்ரோ எரிவாயு விலையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லையென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய வீட்டுப் பாவனை லிட்ரோ எரிவாயு விலையிலும் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லையென நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களிலும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றங்கள் இடம்பெறவில்லை. தொடர்ந்தும்..
12.5 கிலோ எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 3690 ரூபாவிற்கும்
5 கிலோ எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 1482 ரூபாவிற்கும்
2.3 கிலோ எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.