தென்கொரியாவில் இடம்பெற்ற ஆசியாவின் Model Festival போட்டியில் சிறந்த மொடல் அழகியாக இலங்கையைச் சேர்ந்த ஜூலியா சொனாலி கலுஆராய்ச்சி தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு Face of Asia விருது வழங்கப்பட்டது. விருதை வென்ற ஜூலியா நேற்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.
கடந்த மாதம் 15ம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை போட்டிகள் தென்கொரியாவின் கேன்க் வொன்க் நகரில் இடம்பெற்றது. 27 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 70 மொடல் அழகிகள் இதில் பங்கேற்றனர்.
அந்நாட்டின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சு இந்த போட்டியை நடத்தியிருந்தது. இந்நிலையில் நாட்டை வந்தடைந்த ஜூலியாவை வரவேற்பதற்காக அவரது பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பலர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.