பொலன்னறுவை வெலிகந்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செவனப்பிட்டிய நகரில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 71 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றள்ளது. வீட்டின் முன்னிருந்த சிறிய கடையை பாதுகாப்பதற்காக அங்கு உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த காட்டு யானையொன்று அவரை தாக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் மனம்பிட்டிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.