மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற டெக்டர் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கிரியாகம – கரவிலகல சந்தியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டெக்டர் வண்டிக்கு முன்பாக வீதியில் நடந்துச் சென்ற சிறுவன் அதில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நிறுவன் கலாவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் டெக்டரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிரியாகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாத்தறை – ஊரபொக்க எம்பிலிபிட்டிய வீதியின் லீவான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.