பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த அம்பகஸ்ஓய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
குருநாகல் மற்றும் நிவிதிகல பகுதிகளில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பூரண அனுசரணையில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை குறித்த பஸ் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கமைய 8 மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.