ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி வரை நீர்வெட்டு அமுலாகும்.
ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட கட்டான, மினுவாங்கொடை, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.