ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள எதிர்வரும் 5ம் திகதி அமெரிக்காவின் மற்றுமொரு சுதந்திர தினமென முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் ஆட்சியை தோற்கடித்து குடியரசு ஆட்சியை அமெரிக்காவில் நிலைநாட்டுவதன் ஊடாக நவம்பர் 5ம் திகதி மீண்டும் சுதந்திரம் கிடைக்குமென அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடக்கு கெரோலினா மாநிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுவரை 70 மில்லியனுக்கும் அதிகமானோர் தேர்தலை முன்னிட்டு தமது வாக்குகளை வழங்கியுள்ளதுடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்குவீதம் அதிகமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.