களுத்துறை, சேருபிட்ட பகுதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் சேருபிட்ட மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த 42 வயது நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.