அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்திற்குட்பட்ட குசும்புர, கிம்புல்பெட்டியாவ, அம்பகஹாவௌ, கல்கிரியாகம உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிறுத்தைகள் நடமாட்டத்தினால் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த கிராமங்கள் வில்பத்து வனப்பாதுகாப்புக்கு உட்பட்ட எல்லையில் அமையப்பெற்றுள்ளமையே இதற்கு காரணமாகும். இதனால் தமது கிராமங்களுக்குள் வரும் சிறுத்தைகளால் தமது கால்நடைகள் வேட்டையாடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.