பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியமான யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் ஆகியோருக்கிடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியை மேம்படுத்தல், சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல், பாதுகாப்பான கல்வி சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.