பொதுத் தேர்தல் வாக்காளர் அட்டை விநியோக பணிகளுக்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய விநியோக பணிகளுக்கென 2090 அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்குமென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
8000 பேர் பேர் சேவையில் ஈடுபடவுள்ளனர். வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 7ம் திகதி வரை இடம்பெறும்.