2022 முதல் 2023ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு தடவை ஒரு ஊடகவியலாளர் வீதம் உயிரிழந்துள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
பணியின் போது ஊடகவியலாளர்கள் உயிரிழப்பது 38 வீதமாக அதிகரித்துள்ளதாக யுனெஸ்கோவின் புதிய அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது. ஊடகவிலாளர்களின் மரணம் தொடர்பிலான பல வழக்கு விசாரணைகள் இதுவரை நிறைவுக்கு கொண்டுவரப்படவில்லை.
ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது மற்றும் அவர்கள் தண்டனைக்கு உட்படுவதற்கு எதிராக பல அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. எனினும் யுத்த சூழல் உட்பட பல அசாதாரணமான சூழ்நிலைகளின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பலர் தமது உயிழை இழந்துள்ளனர்.
உயிரிழப்புக்கு காரணமாக தரப்பு தண்டிக்கப்படுவதும் குறைவாகவே இருப்பதாக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay தெரிவித்துள்ளார்.