கிரேண்ட்பாஸ் பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை வத்தளையில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி கிரேண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் வைத்து காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது தாக்குதலுக்கென பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபரொருவர் வத்தளை, பகுதியில் வைத்து நேற்றையதினம் (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த 2 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.