பதுளை, துன்ஹிந்த பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.