ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi இற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்களை பலப்படுத்துவதற்கென UNFPA அமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமென அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன், தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.