மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை, அம்பதென்ன பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில் அஸ்திவாரத்தை வெட்டி கொண்டிருந்த நிலையில், அதற்கு உதவிய சிறுமியே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இவரது சகோதரரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தந்தைக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.