நாட்டில் 12 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தட்டம்மை தடுப்பூசி வாரத்தை அமுல்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி முதல் நவம்பர் 09 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
2019 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு இலங்கையை தட்டம்மை நோயை ஒழித்த நாடாக சான்றளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.