ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று மாலை முதல் ரயில் அனுமதிச் சீட்டு வழங்கும் கடமைகளிலிருந்து விலகியுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் சஞ்ஜய ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பல கோரிக்கைகள் தொடர்பில் தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர மற்றும் ரயில்வே திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.