கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்திலுள்ள எரிபொருள் குழாயொன்று வெடித்ததன் காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் கசிவு ஏற்ப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து எரிபொருள் கொண்டு செல்லும் ரயில் மார்க்கத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்க்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் JET A1 ரக விமானத்திற்கென பயன்படுத்துவதற்கென குறித்த குழாய் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வந்தது.
கொலன்னாவ முனைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் ஊடாக இந்த குழாய் மீதொட்டமுல்ல பகுதியில் அமையப்பெற்றுள்ளமை தெரியவந்தது. குறித்த எரிபொருள் குழாய் அமைந்துள்ள பகுதியில் 33000 வோட் வலுகொண்ட மின் கம்ப கட்டமைப்பு மற்றும் வீடுகளும் காணப்படுகின்றன.
கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பௌசர் ஒன்றின் ஊடாக கசியும் எரிபொருளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சேதமடைந்த குழாயை சீரமைப்பும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.