மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக குறித்த பாடசாலைகள் எதிர்வரும் 9ம் திகதி திறக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.