நடிப்பு மாத்திரமன்றி வியாபாரத்திலும் அதிக ஆர்வம் செலுத்தி வரும் லேடிசுப்பர்ஸ்டார் நயன்தார, தனது அழகுசாதனப் பொருள் தயாரிப்பை மும்பையில் அறிமுகப்படுத்தும் செயற்பாட்டை அண்மையில் முன்னெடுத்தார்.
இந்தியா உட்பட மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் குறித்த அழகுசாதனப் தயாரிப்பு விற்பனைக்கு உள்ள நிலையில்,
மும்பை மக்கள் மத்தியில் தனது தயாரிப்பை பிரபல்யப்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ள நயன்தாரா இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு மும்பையிலுள்ள பல்பொருள் கட்டிடத்தொகுதியொன்றில் இடம்பெற்றது. இதில் நயன்தாரா கலந்துகொண்டு ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கும் பதிலளித்தார்.