‘நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச ஆராய்ச்சி மாநாடொன்று 2024 ஒக்டோபர் 29ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
நூலகர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் பங்கேற்ற இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்,
‘நீங்கள் வெறும் நூலகர்கள் மாத்திரம் அல்ல, மாறாக அறிவு சொத்தின் பாதுகாவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்பதுடன் எமது டிஜிட்டல்மயப்படுத்தும் எதிர்காலத்தின் செயற்பாட்டாளர் தரப்பாகவும் காணப்படுகின்றீர்கள்’ என குறிப்பிட்டார். அத்துடன் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்தும் போது நூலகம் மற்றும் நூலகர்களின் பிரதான கடமைகள் தொடர்பிலும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அறிவுக்கான அணுகலை ஜனநாயகமயமாக்கல் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள், அமைப்புக்களின் கொள்ளளவை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி இலங்கையின் நூலக சேவையை நவீனமயப்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் ஆற்றல் இந்த மாநாட்டின் ஊடாக ஆராயப்பட வேண்டும். அறிவு பரஸ்பரத்தை குறைத்து, நாடு முழுவதும் புத்தாக்க வல்லுனர்களை போஷிப்பதற்கான ஊக்கியாகவுள்ள நூலகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுமென தெரிவித்த பிரதமர், டிஜிட்டல் பரிணாமத்திற்கான எதிர்பார்ப்புகள் மீதான ஈடுபாடு குறித்தும் சுட்டிக்காட்டினார்.