புதிய மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்கென எடுத்து வரப்பட்ட கருவாட்டு கறியில் ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய சிறிய பெக்கட்டுக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று மாலை கைதியொருவரை பார்க்க வந்திருந்த நபர் ஒருவர் இதனை எடுத்து வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொரள்ளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மெகசின் சிறைச்சாலையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.