மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்தார்.
கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.