ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்((port city colombo private limited ) முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங்(xiongHongfeng) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போதுகவனம்செலுத்தப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தினால் மூன்று மில்லியன் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டது.
போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் சியன் நன்னும் Xian Nan(Neo) இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார்.