நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நூற்றுக்கு 11.5 வீதத்தால் கையிருப்பு அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 4843.3 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக கிடைக்கப்பெற்றுள்ளதென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடம் கடந்த செப்டம்பரில் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பரில் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.