கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.