நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.
விக்கிரவாண்டி வி சாலையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரைநிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டில் இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் தற்போதே அணி திரண்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
85 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டு திடலில், 5 நுழை வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.