காங்கேசன் துறை பகுதியிலிருந்து யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது.
குறித்த அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மாவிட்டபுரம் பகுதியில் இயங்கி வந்த நிலையில், தற்சமயம் மீண்டும் காங்கேசன்துறையில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
மீண்டும் அஞ்சல் அலுவலகம் இயங்க கட்டட வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்கு பாரிய நிதி செலவு காணப்படுவதன் காரணமாக தனியார் கட்டடம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து குறித்த அஞ்சல் அலுவலகம் தனது சேவையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன் துறையில் அஞ்சல் அலுவலகம் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.