எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7.00 முதல் 48 மையங்களில் நடைபெற்று வருகிறது.
அதற்கமைய இன்று காலை 10.30 மணி நிலவரம் படி சுமார் 30% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் 4 மணிக்குப் பின்னர் வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார்.