அரசியலைப் போன்று நிர்வாக கட்டமைப்பிலும் மாற்றம் தேவையென பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரிலுள்ள வங்கியாளர்கள், நிதி, வியாபார சமூகத்தினர், புத்திஜீவிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மாவட்த்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் அரசியல் போக்கில் நாட்டு மக்கள் மத்தியில் விரக்தி காணப்படுவதுடன் அதனை மாற்றுவதற்கான பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.