முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்கும் உத்தரi பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி சார்பில் ரன்ஜன் ராமநாயக்க வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் உரிமை இல்லையென தெரிவித்து தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட சுயாதீன குழுவின் உறுப்பினரான கே.எம்.மஹிந்த சேனாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.