அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 2004-ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். ஆனால் 2 நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்தார். அவர்கள் 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரிட்னி ஸ்பியர்ஸ் 2022-ம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று பதிவிட்டுள்ளார்.