தடுமாற்றம் இல்லாத கொள்கையும் சிறந்த தலைமைத்துவமும் அவசியமானதென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது வழிமுறைகளை ஏற்று மக்கள் தமக்கு அரசியல் பலத்தை வழங்க அணிதிரள வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியல் பயன்பாட்டில் மாற்றம் தேவையென தமிழ் மக்கள் உணர்ந்துள்ளதாகவும் அதனை தேர்தலின் ஊடாக சாத்தியமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.