மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா போன்ற தொலைத்தொடர்புக் கோபுரங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை பொலிஸ் தொடர்பாடல் வலையமைப்பைப் பேணிச் செல்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா போன்ற தொலைத்தொடர்புக் கோபுரங்கள் துரிதமாகத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2024-2026 நடுத்தரக் கால வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் தேவையான நிதியை ஒதுக்கி குறித்த தொலைத்தொடர்புக் கோபுரங்களைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.