சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று அழைக்கப்பட்டது.
இதன்போது, சம்பவம் தொடர்பில் நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வாக்குமூலம் ஒன்றை வழங்க தயார் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து, மனுவை வரும் 25ம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டது.