இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக றியர் அட்மிரால் வை.ஆர்.சேரசிங்கவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய றியர் அட்மிரால் பீ.விதான ஓய்வுபெற்ற நிலையில், புதிய கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
றியர் அட்மிரால் பீ.விதான தனது 55ஆவது வயதில் கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி ஓய்வுபெற்றார்.
அதற்கமைய, வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தற்போது கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றும் றியர் அட்மிரால் வை.ஆர்.சேரசிங்கவை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.