ஒளி மூலம் தூண்டக்கூடிய உலகின் முதல் ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்பை உருவாக்கி 2024 விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் ஆராய்ச்சி பிரிவில் இறுதிப் போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், பிஎச்டி மாணவர் அஜ்மல் அப்துல் அஜீஸ். outstanding international student of the year உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுக்கொண்டுள்ளார்.
கோக்லியர் கருவி என்பது உட்புற மற்றும் வெளிப்புற பாகங்களைக் கொண்ட ஒரு சிறிய மின்னணு சாதனமாகும். இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்க கேட்பதற்கு பொறுப்பான கோக்லியர் நரம்பைத் தூண்டுகிறது.
1978 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட multiple channel cochlear implant மின்சாரம் மூலம் மட்டுமே தூண்டப்பட்டு கேட்கும் திறனை வழங்கியது . இது தற்போது 46 வருடங்களுக்கு பின்னர் ஒளியாலும் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் துல்லியமான முறையில் எல்லா சூழ்நிலைகளிலும் கேட்கும் திறன் மேம்படுகிறது . 4வருட ஆராய்ச்சியின் பலனாக ஹைபிரிட் கோக்லியர் உள்வைப்புகள் மூலம் , செவித்திறன் தொழில்நுட்பத்தில் முன்னேற்றகரமான மாற்றத்தை குருநாகல் பரஹதெனியவை சேர்ந்த அஜ்மல் அப்துல் அஜீஸ் உருவாக்கியுள்ளார்.
செவித்திறன் தொடர்பில் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் மூலம் கேட்டலுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் நபர்களுக்கான துல்லிய ஒலித்திறனுக்காய் உழைப்பது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்க்கு முன்னரும் இரத்தம் எடுக்காமல் உடலின் ஹீமோகுளோபின் அளவை கணிக்கும் கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் .